யாழ்ப்பாணம் அரியாலையில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று அரியாலை நாவலடியில் இடம்பெற்றது.
மோட்டார் சைக்களிலில் பயணித்த அவர் ரயில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, புகையிரதத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினார் என்று தெரிவிக்கப்பட்டது.
உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.