உலகம் முழுவதும் பிரபலமான பிரிட்டிஷ் ஊடகமான பிபிசி-க்கு சீனா தடை விதித்துள்ளது.
அதிபர் ஷி ஜின் மற்றும் சீனாவின் கொரோனா வைரஸைக் கையாளுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ‘பொய்யான அறிக்கை வெளியிடலுக்கு’ பிபிசி காரணமாக இருந்தது. சீனாவில் போலி செய்தி சகித்துக்கொள்ள முடியாது என சீன தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் சீன ஊடகமான CGTN ஒளிபரப்புக்கு வழங்கப்பட்ட உரிமம் ஒரு வாரத்திற்கு முன்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான Ofcom, CGTN ஊடகம் முற்றிலும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதாக முடிவு செய்தத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிரித்தானியாவை பழிதீர்க்கும் வகையில் தற்போது சீனா பிசிசி-க்கு தடை விதித்துள்ளது.
சீன அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அதிருப்தியடைந்துள்ளதாக பிபிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், பிபிசி உலகின் மிகவும் நம்பகமான சர்வதேச செய்தி ஊடகம் மற்றும் நியாயமான, பாரபட்சமின்றி மற்றும் பயமோ ஆதரவோ இல்லாமல் உலகெங்கிலும் உள்ள செய்திகளை பற்றிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
BBC statement in response to China's ban of BBC World News pic.twitter.com/IzslcAd4tz
— Yalda Hakim (@BBCYaldaHakim) February 11, 2021
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பிரித்தானியா அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



















