எகிப்தில் பண்டைய நகரம் அபிடோஸ். இங்கு காணப்படும் தொல்பொருள் தளங்களில் மிகவும் முக்கியமானதாகும்.
1970 களின் பிற்பகுதிகளில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்ற போது தான் இங்கு, கி.மு 2900 க்கு முன் வாழ்ந்த எகிப்திய அரசர்களின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்குப் பிறகு, தொல்லியல் ரீதியாக இந்தப் பகுதி புகழ் பெற்றது.
இதனிடையே, சுமார் 5000 ஆண்டுகள் பழைமையான, ஆயிரக்கணக்கான லிட்டர் பீர் உற்பத்தி செய்யக்கூடிய மதுபானக் ஆலையை எகிப்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு கண்டு பிடித்துள்ளது.
மேலும், கி.மு 3100 வாக்கில் அரசர் நர்மன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
20 மீட்டர் நீளமும் 2.5 மீட்டர் அகலமும் கொண்ட பீர் தொழிற்சாலை, சுமார் 22,400 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்டது.
ஒவ்வொன்றும் எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 40 களிமண் பானைகளைக் கொண்டுள்ளது.
இந்த அரிய கண்டுபிடிப்பைக் அகழாய்வு செய்து கண்டுபிடித்துள்ள பேராசிரியர் மாத்தீவ் ஆடம்ஸ், ”எகிப்தின் ஆரம்பகால மன்னர்களுக்கு நடைபெற்ற இறுதிச் சடங்குகளின் போது பீர் பயன்படுத்தப்பட்டது என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.