நம்மில் நிறைய பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை முன் நெற்றியில் வழுக்கை. முன்னாடி நெற்றியில் சில பேருக்கு முடி வளர்ச்சி மிக மிக குறைவாக இருக்கும்.
இதற்கு, மிக மிக சுலபமான முறையில், அதிவிரைவாக, அந்த வழுக்கையில் முடி வளர செய்வதற்கான ஒரு ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
முதலில் முடி கொட்டுவதற்கு முதன்மையான காரணம் நம்முடைய உடலில் சூடு அதிகமாக இருப்பது தான்.
உடலில் இருக்கும் சூட்டை தணிக்கும் பட்சத்தில், முடி உதிர்வு குறைக்கப்படும். இதற்காக முதலில் நம்முடைய தலைமுடிக்கு ஆயில் மசாஜ் கொடுக்க வேண்டும்.
அதற்கு 3 எண்ணெய் தேவைப்படும். நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இந்த 3 எண்ணெயில் இருந்தும் 1 ஸ்பூன் அளவு எடுத்து, மூன்றையும் ஒன்றாக கலந்து, டபுள் பாய்லின் மெத்தடில் மிதமாக சூடு செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு வெதுவெதுப்பாக இருக்கும் இந்த எண்ணெயை முன்நெற்றியில் எந்த இடங்களில் வழுக்கை இருக்கின்றதோ அந்த இடத்தில் நன்றாக வட்டவடிவில் தடவி, மசாஜ் செய்யவேண்டும்.
தலை முழுவதும் இந்த எண்ணையை தேய்த்து கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
இது ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே உங்களுடைய தலையில் இருக்கலாம். இந்த எண்ணெய் வேர் கால்களில் நன்றாக ஊறும்போது போது முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
மறுநாள் காலை எழுந்து சின்ன வெங்காயம் 6 லிருந்து 7 எடுத்துக் கொள்ளுங்கள். தோலை உரித்து மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும்.
இதனுடன் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், வல்லாரை பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து விழுது போல் அரைத்து உங்களுடைய நெற்றிப் பகுதியில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி, நன்றாக 20 லிருந்து 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கலாம்.
இப்படியாக வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் உங்களுடைய முடியில் இந்த இரண்டு மசாஜ் செய்து வரும் பட்சத்தில் வழுக்கை இருக்கும் இடத்தில் அதிவிரைவாக முடி வளர்வதை உங்களால் உணர முடியும்.