கனடாவில் தம்பதிக்கு லொட்டரியில் பெரியளவிலான பரிசு விழுந்துள்ளது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒன்றாறியோவை சேர்ந்த மார்க் – தோரோத்தி அன் தம்பதி தான் இந்த அதிர்ஷ்டசாலி ஆவார்கள்.
இருவரும் தனித்தனியாக லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் மார்க் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு $70,000,000 என்ற மிகப்பெரிய பிரம்மாண்ட பரிசு விழுந்துள்ளது. தங்களுக்கு இவ்வளவு பெரிய பரிசு விழுந்ததை தம்பதியால் நம்பவே முடியவில்லை.
ஒரு கட்டத்தில் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டுள்ளனர்.
பரிசு பணத்தை வைத்து கனடா முழுவதும் பயணித்து தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவி செய்ய மார்க் – அன் தம்பதி முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் பேசுகையில், நமது பிள்ளைகளுக்கு சிறப்பான விடயங்களை கொடுக்க வேண்டும் என்று நினைப்போம். தற்போது எங்களால் அது முடியும். அவர்கள் புதிய வீடு, வாகனங்கள் இப்போது வாங்க முடியும்.
எங்களுக்கென்று தனிவீடு வாங்கவும் முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.
பின்னர் மார்க் தனியாக பேசுகையில், கிழக்கு கடற்கரையில் தொடங்கி, இந்த அற்புதமான நாடு முழுவதிலும் பார்க்க பல அழகான பகுதிகள் உள்ளன.
நான் அதை டிவியில் மட்டுமே பார்த்திருக்கிறேன்,ஆனால் இப்போது நானும் என் மனைவியும் கனடா முழுவதையும் நேரில் சென்று பார்ப்போம் என கூறியுள்ளார்.