ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் கடந்த 20 நாட்களில் மாட்டும் 40,000 நிலநடுக்கங்கள் ஏற்ப்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவற்றில் பல நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.7 அளவைக் கடந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்களாக இருந்ததாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24 முதல் மார்ச் 16-ஆம் திகதி வரையிலான இந்த நிலநடுக்கங்கள், கடந்த ஆண்டின் மொத்த நிலநடுக்கங்களையும் விட பல மடங்கு அதிகம் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 8 நாட்களில் 16,000-க்கும் மேற்பட்ட நடுக்கம் பதிவாகியுள்ளது, பொதுவாக ஒரு வருடம் முழுவதும் 1,000 முதல் 3000 நிலநடுக்கங்கள் பதிவாவது வழக்கம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1/2 Today, the total number of earthquakes measured on the #Reykjanes peninsula during the last two weeks exceeded 34,000. This exceeds the number of earthquakes measured during the whole of 2020, which was characterized by unusually high seismic activity.
— Icelandic Meteorological Office – IMO (@Vedurstofan) March 10, 2021
இதனால், அந்நாட்டில் எரிமலை வெடிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புவியியல் ரீதியாக, ஐஸ்லாந்து Eurasia மற்றும் வட அமெரிக்க டெக்டோனிக் தகடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது மற்றும் இரண்டு தட்டுகள் ஆண்டுக்கு 3.0 சென்டிமீட்டர் (0.79 அங்குலங்கள்) வேகத்தில் ஒன்றுக்கொன்று எதிர் திசைகளில் நகரும்போது அடிக்கடி பூகம்பங்களை அனுபவிக்கிறது.