பிரித்தானியாவின் இங்கிலாந்தில் நூற்றுக்கு மேற்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அதில் 5 இடங்களில் கொரோனா மிக வேகமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக 64 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 5,089 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் மொத்தம் 125,580 பேர் உயிரிழந்திருப்பதுடன், 4,263,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பும் உள்ளது.
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் தன்மை கொண்டது என்பதால், இன்னும் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்ட நிலையில் உள்ளன.
இதையடுத்து, Public Health England கடந்த வாரம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் 104 பகுதிகளில் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், 209 பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது Derbyshire Dales பகுதி கொரோனா பாதிப்பை அதிகம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தொற்று விகிதம் 100,000 பேருக்கு, 56.7-ஆக இருந்தது, தற்போது 153.5-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக North East Lincolnshire-ல் கொரோனா பாதிப்பு 101.5-ல் இருந்து 149.8-ஆகவும், North Lincolnshire 81.3-ல் இருந்து 122.5-ஆகவும், Blackburn with Darwen 90.2-ல் இருந்து 128.9-ஆகவும், Melton 44.9-ல் இருந்து 82.0 ஆகவும் உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் இருக்கும் Hull மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டுள்ளதாகவும், இங்கு 444 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 100,000-பேரில் 170.9- பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
இது முந்தைய வாரம் 148.6-ஆக இருந்தது. Northamptonshire-ல் உள்ள Corby-யில் பரவும் வீதம் 134.3ல் இருந்து 162.0 -வாக அதிகரித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக Worcestershire-ல் உள்ள Redditch-ல் பாதிப்பு வீதம் 140.7-ல் இருந்து 157.2-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக இங்கு 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போதும், இது அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.