புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையங்களை யாழ்ப்பாணத்தில் நடத்திவந்த யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல ஆசிரியரான அன்பொளி கல்வியகத்தின் நிர்வாகி வே.அன்பழகன் இன்று காலை கொழும்பில் காலமானார்.
உடல் நிலைப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த அவர் கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்பொளி கல்வியகத்தில் கல்விபயில்வதற்காக ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்பொளி புலமைப்பரிசில் மாதிரி மற்றும் வழிகாட்டிகள் நாடளாவிய ரீதியில் தமிழ் மாணவர்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.