ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் நவகிரகங்களில் முழு சுபர் அதாவது முழு சுப கிரகம் என்றால் அது குரு பகவான் மட்டும் தன். இவர் ஒரு ராசிக்கு நன்மை தருகின்றாரோ இல்லையோ, பெரியளவிலான தீமை தராதவர்.
குரு அதிசார பெயர்ச்சி என்றால் என்ன?
குரு பகவான் அதிசார பெயர்ச்சியாக பங்குனி 24ம் தேதி ஏப்ரல் 5 நள்ளிரவு 12.42 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு 162 நாட்கள் அதிசார பெயர்ச்சியாகச் செல்ல உள்ளார்.
கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம். ஆனால் சில சமயங்களில் தான் மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய நாளுக்கு முன்னதாகவே வேகமாக முன்னோக்கிச் செல்ல ஆரம்பிக்கும். அந்த நிலையில் ராசிக்குள்ளாகவே இருக்கும் நட்சத்திர பாதத்தில் முன்னோக்கி செல்லும், சில நேரங்களில், தான் இருக்க வேண்டிய ராசியைத் தாண்டி அடுத்த ராசிக்கு செல்லக்கூடிய நிலை இருக்கும்.
கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம். ஆனால் சில சமயங்களில் தான் மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய நாளுக்கு முன்னதாகவே வேகமாக முன்னோக்கிச் செல்ல ஆரம்பிக்கும்.
அந்த நிலையில் ராசிக்குள்ளாகவே இருக்கும் நட்சத்திர பாதத்தில் முன்னோக்கி செல்லும், சில நேரங்களில், தான் இருக்க வேண்டிய ராசியைத் தாண்டி அடுத்த ராசிக்கு செல்லக்கூடிய நிலை இருக்கும்.
அப்படி அதிசாரமாக செல்லக்கூடியதாக இந்த குரு அதிசார பெயர்ச்சி நிகழ உள்ளது. மகரத்தின் அவிட்டம் நடத்திரம் 2ம் பாதத்திலிருக்கும் குரு கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு சென்றுவிடுகிறார். சதயம் நடசத்திரம் வரை சென்று திரும்ப உள்ளார் குரு.
குரு எப்படிப்பட்ட பலன் தருவார் ?
மகர ராசி குருவிற்கு சமமான ஸ்தானம் என்றாலும், சனியின் வீடான மகரத்தில் குரு நீசமடைந்த நிலையில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில் கும்பத்தில் 162 நாட்கள் கும்ப ராசியில் குரு சமமான உறவுள்ள ஸ்தானத்திற்கு செல்ல உள்ளார்.
சனி பகவான் இருளானவர். குரு ஒளி பொருந்தியவர். சனியின் இருளாக இருந்தாலும் குருவின் ஒளியை முழுவதுமாக நீசபங்கப்படுத்த முடியாது. அதாவது ஒளியை அடக்க முடியாது.
பொதுவாக கும்பத்திற்கு குரு முறையாக பெயர்ச்சி ஆகும் போது என்ன பலனெல்லாம் தருவாரோ, அதே அளவு பலனை அவசர அவசரமாக இந்த 162 நாட்களில் ஒவ்வொரு ராசிகளுக்கு பலனைத் தருவார்.
குருவின் இந்த அதிசார பெயர்ச்சியின் காரணமாக குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வை பலனாக மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசிகளை பார்வை செய்து அதிர்ஷ்ட பலன்களை வழங்க உள்ளார்.
தற்போதுள்ள தேர்தல் காலம் என்பதால் அரசியல் தலைவர்கள் வெல்லும் பட்சத்தில் அவர்களுக்கு சுப பார்வை விழுந்தால் அவர்கள் கொடுக்கக்கூடிய வாக்குறுதிகளில், பாதியை இந்த குரு அதிசார காலத்திலேயே நிறைவேற்ற வாய்ப்புள்ளது.
இந்த அதிசார பெயர்ச்சியின் பலன் தான், அடுத்து நவம்பர் 13ல் முறைப்படி குரு கும்பத்தில் சஞ்சரிக்கும் போது தருவார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த காலத்தில் குருவின் சுப பார்வை பெறக்கூடிய ராசிகளுக்கு திருமணம், காதல், தொழில், வியாபாரத்தில் வெற்றி, உத்தியோகத்தில் உயர்வு போன்றவற்றை அருளக்கூடியதாக இருப்பார்.