அமெரிக்காவிலுள்ள டெக்ஸ்சாஸ் பூங்காவில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 5பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக பொலிஸார் விரைந்த போதும் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
டெக்சாஸின் பிரையன் நகரப் பொலிஸார் சந்தேக நபரைத் தேடி வருவதோடு விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, அமெரிக்க மக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதியுள்ளதால் அங்கு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
குறித்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.