பிக்பாஸ் ரம்யா பாண்டியன் புதிய கார் ஒன்றினை வாங்கியுள்ளதை அவரது தம்பி தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்.
ஆண்தேவதை, ஜோக்கர் போன்ற படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளியில் பங்குபெற்று பிரபலமானார். பின்பு கலக்கப்போவது யாரு சீசன் 9ல் நடுவராக கலந்து கொண்ட இவர், பிக்பாஸ் மூலம் சிங்கப்பெண்ணாக புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
பொதுவாக அமைதியாக இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் தனது கருத்தை நறுக்கென சொல்லி விடுவார். பாலாஜி கூறும்போது கூட “ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு ரம்யா ஒரு சிறந்த உதாரணம் என்று கூறியிருந்தார்.
அப்படி தனது சாதுர்ய குணத்தினால் பல சூழ்நிலைகளை சுமுகமாக மாற்றுவது அவருக்கே உரிய தனித்திறமை.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ரம்யா பாண்டியன் இருந்த போதும் கூட அவரது குடும்பத்தினர் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்.
அதிலும் முக்கியமாக அவரது தம்பி பரசு பாண்டியன் அக்காவிற்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அவர் தற்பொழுது ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும் பொழுது “ரம்யா பாண்டியன் அக்கா! உங்களுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது முதல்ல பிஎம்டபிள்யூ. 2011ஆம் ஆண்டு 21G இப்பொது 2021-ல் பிஎம்டபிள்யூ GT” என்று மாஸான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram