அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி 13 வயது சிறுவனை ஓட ஓட விரட்டி நெஞ்சில் சுட்டுக்கொன்ற பரபரப்பு வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 29ம் திகதி சிகாகோவில் 13 வயதான Adam Toledo என்ற சிறுவன் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுவன் கையில் துப்பாக்கி வைத்திருந்தால் அவரை சுட்டதாக பொலிசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், அவனிடம் துப்பாக்கி இல்லை என குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மத்தியில் சம்பவத்தின் போது சிறுவனை சுட்டுக்கொன்ற அதிகாரி உடலில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவான காட்சிகளை சிகாகோ காவல்துறை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், காரை விட்டு இறங்கும் அதிகாரி இரண்டு பேரை துரத்தி செல்கிறார், ஒருவனை தட்டிவிட்டு பிடித்த நிலையில் Adam Toledo-ஐ துரத்தி செல்கிறார்.
நில் நில் என அதிகாரி கூச்சலிட, நின்று திரும்பிய Adam Toledo தனது இரண்டு கைகளையும் மேலே உயர்த்துகிறார்.
அவர் கையில் ஏதுவும் இல்லாத நிலையில் பொலிஸ் அதிகாரி கீழே போடு என கூச்சலிட்டு தனது துப்பாக்கியால் சிறுவனை சுடுகிறார். இரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியல் பொருத்தப்பட்டிருந்த மற்றொரு சிசிடிவி-யில், சிறுவன் நின்று கையை உயர்த்துவதற்கு முன் வேலிக்கு இடையே உள்ள இடைவெளியில் தான் வைத்திருந்த துப்பாக்கியை தூக்கி வீசுயது பாதிவாகியுள்ளது.
பொலிசார் அந்த துப்பாக்கியையும் கண்டெடுத்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்கறிஞர் கூறியதாவது, சிறுவனுடன் இருந்த 21 வயது இளைஞரான ரூபன் என்பவர் அவ்வழியாக சென்ற கார் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கி சத்தத்தை கேட்டு பொலிசார் சம்பவயிடத்திற்கு வந்துள்ளனர், இதன் பின் நடந்த சம்பவத்தில் ரூபடனுடன் இருந்த சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜரான ரூபன் மீது சட்டவிரோதமாக ஒரு ஆயுதத்தை பயன்படுத்தியது, துப்பாக்கியை பொறுப்பற்ற முறையில் துப்பாக்கி சூடு நடத்தியது மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தியது என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Police body-cam unedited footage released of the fatal shooting of #AdamToledo pic.twitter.com/4WtbaHjdhJ
— The ALOT Podcast (@ChicagoALOT) April 15, 2021