பிரித்தானியாவின் தலைநகரில் 14 வயது சிறுவன் ஒருவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு லண்டனின், Canning நகரில் இருக்கும் பீட்சா கடைக்கு வெளியே சுமார் 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடப்பதாக, பொலிசாருக்கு உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் விரைந்து வந்த பொலிசார், சிறுவனின் உடலை மீட்டு முதலுதவி சிகிச்சை கொடுத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் உயிரிழந்துவிட்டான். இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், தங்களுக்கு இப்பகுதியின் E16 தெருவில் சிறுவன் ஒரு தாக்கப்பட்டு கிடப்பதாக தகவல் வந்தது.
அதன் பின் நாங்கள் உடனடியாக விரைந்த போது, சிறுவன், Zzetta pizzas கடைக்கு வெளியே இருக்கும் பார்க்கிங் பகுதியில் குத்தப்பட்ட நிலையில் கிடந்தான்.
இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மாலை 4.30 மணிக்கு உயிரிழந்துவிட்டான். இது குறித்து அந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. யாரேனும் இது குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.