கனடா மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவியுடன் சென்று கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று (வெள்ளிக்கிழமை) தலைநகர் ஒட்டாவாவில் உள்ள மறுந்தகத்துக்கு தனது மனைவி சோஃபியுடன் சென்றுள்ளார்.
அங்கு அவர் கமெரா முன்னிலையில் தனது சட்டையை கழற்றி, அங்கிருந்த சுகாதார ஊழியரிடம், தான் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
பின்னர் அவர், கமெரா முன்னிலையில் தனக்கான முதல் டோஸ் அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்புசியை செலுத்திக்கொண்டார். அவரை தொடர்ந்து அவரது மனைவியும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
கனேடிய மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் நோக்கில் ட்ரூடோ இவ்வாறு செய்துள்ளார்.
கனடாவில் நான்கு கொரோனா தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அஸ்ட்ரஜெனேகா தடுப்பூசியால் இரத்த உறைவு போன்ற சில அரிய பிரச்சினைகள் ஏறப்டுவதாக எழுந்த கவலையை தொடர்ந்து அந்த தடுப்பூசியின் மீதான பயம் அதிகரித்தது.
ஆனால், கனடாவில் கிட்டத்தட்ட 1.1 மில்லியன் அஸ்ட்ராஜெனேகா டோஸ்கள் வழங்கப்பட்டதில், 4 பேருக்கு மாட்டுமே இதுபோன்ற அரிய பிரச்சினைகள் ஏற்ப்பட்டுள்ளன.
அதனால், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பாதுகாப்பானது என கனேடிய தலைமை மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையியில், கனடா அரசு 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தங்களுக்கான முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.