அகமதாபாத்தில் இருக்கும் சார்தாபென் மருத்துவமனைக்கு வெளியே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் படுத்துக் கிடப்பதை பார்த்த ராதிகா சரத்குமார் மனமுடைந்துள்ளதுடன் கோபப்பட்டிருக்கிறார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மகனை சாலையில் படுக்க வைத்துவிட்டு பெட் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தாய் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
https://twitter.com/free_thinker/status/1385311622302892032108
ஆம்புலன்ஸில் வந்தால் தான் அந்த மருத்துவமனையில் அனுமதிப்பார்களாம். அந்த தாய் தன் மகனை ஆம்புலன்ஸில் அழைத்து வராததால் அனுமதிக்க மறுத்துவிட்டார்களாம்.
அந்த வீடியோவை பார்த்த ராதிகா சரத்குமார் கொந்தளித்துள்ளார்.
ராதிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது.
கோபம் வருகிறது, அதே நேரம் எதுவும் செய்ய முடியாத நிலை என தெரிவித்து கண்ணீர் தாரை தாரையாக ஓடும் எமோஜியை போஸ்ட் செய்திருக்கிறார்.
ராதிகாவின் ட்வீட்டை பார்த்தவர்களோ, வீடியோவை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. குஜராத் அவர் மாநிலமாச்சே. அங்குமா இந்த அவல நிலை.
குஜராத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை. அந்த பையனுக்கு யாராவது உதவு செய்தால் நன்றாக இருக்கும். அது என்ன 108 ஆம்புலன்ஸில் வந்தால் தான் அனுமதிப்போம் என்பது.
சுத்த முட்டாள்தனமாக இருக்கிறதே என தெரிவித்துள்ளனர்.