இலங்கையில் ஏப்ரல் மாதத்தில்15,440 கொரோனா தொற்றார்கள் உறுதி செய்யப்பட்டதுடன், 110 மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்த மாதத்தின் மொத்த தொற்று நோயாளர் தொகையில் 6,741 வழக்குகள் ஏப்ரல் கடைசி ஐந்து நாட்களில் பதிவாகியுள்ளன.
இது மாத்தில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகையில் 43% வீதமாகும். மாதத்தின் இறுதி 5 நாட்களில் தினசரி சராசரி 1,348 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத வகையில் தொற்று நோயின் பெரும் எழுச்சியாக இது அமைந்துள்ளது. மேலும் நாட்டில் இதுவரை இல்லாதவாறு 11,504 தொற்று நோயாளர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.