தமிழக சட்டசபை தேர்தலில், திமுக 10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதற்கு, திமுக. தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மேலும், என்னதான் திமுக. அதிமுக கடும் போட்டி நிலவி இருந்தாலும், மற்ற கட்சிகளில் மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் மட்டுமே ஆரம்பத்தில் இருந்து முன்னிலை வகித்து வந்தார்.
எப்படியும், அவர் வெற்றி பெற்றுவிடுவார் என ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் காத்திருந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் வானதி சீனிவாசன் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார்.
இதனால், ட்விட்டரில் கமலுக்கு ஆதவராவகவும், கோவை மக்களை வசைப்பாடியும் நெட்டிசன்கள் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில், திரு கமல் அவர்களின் வெற்றி என்பது…. வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து,
அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல்,வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாக வருகிறது.
திரு கமல் அவர்களின் வெற்றி என்பது….
வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்)
வாங்காமல்,வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே!!!
திரு கமல் அவர்களின் வெற்றி என்பது….
வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்)
வாங்காமல்,வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே!!!— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 2, 2021