அழகிய இளம்பெண் ஒருவருடனான உறவுதான் பில் கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்துக்கு காரணம் என சீன சமூக ஊடகங்களில் தீயாய் பரவிவருகிறது செய்தி ஒன்று.
பில் கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிவருபவர், Zhe ‘Shelly’ Wang (36) என்ற சீனப்பெண்.
திருமணமாகாத Shellyக்கும், பில் கேட்ஸுக்கும் தவறான உறவு இருந்ததால்தான் 27 ஆண்டுகால திருமணத்தை மெலிண்டா முறித்துக்கொண்டார் என சீன சமூக ஊடகமான Weiboவில் தீயாய் செய்தி பரவியது.
ஆனால், அது ஒரு வதந்தி என்று கூறியுள்ள Shelly, ஆதாரமில்லாததால், அந்த வதந்தி தானாகவே வலுவிழந்துவிடும் என தான் நினைத்ததாகவும், அது இந்த அளவுக்கு மோசமாக பரவும் என தான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
130 பில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரரான பில் கேட்ஸும் அவரது மனைவியும், தாங்கள் பிரிவதாக அறிவித்தாலும், தாங்கள் பிரிவதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.