மலையாளத்தில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மலையாளத்தில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனிடையே EVP படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வரும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு ஒளிப்பதிவாளர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 17 நபர்களுக்கு தொற்று உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆனாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. கொரோனா ஆபத்து தொடர்வதால் சில வேலை பிக் பாஸ் நிறுத்தப்படுமா என்ற கேள்வி தற்போது சமூகவலைத்தளத்தில் எழுந்துள்ளது.