பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகைக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், அவரது புகைப்படங்களுக்கு லைக்ஸை குவித்து வருகின்றனர்.
நடிகை கவிதா கவுடா, பிரபல ரிவியில் ஒளிபரப்பான ‘மகாபாரதம்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். தொடர்ந்து சில கன்னட மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்தார்.
தற்போது தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாட்சியாக நடித்திருந்தார். இதற்கிடையில் கன்னடத்தில் ஒளிபரப்பாகிய ‘பிக் பாஸ்’ சீசன் 6ல் வாய்ப்பு கிடைத்ததால் தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
பிக்பாஸில் கலக்கிய இவர் இறுதிப் போட்டியாளர் என முன்னேறி சென்றதோடு, ரசிகர்களையும் கவர்ந்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து லக்ஷ்மி பிரம்மா எனும் சீரியலில் நடித்து வந்தநிலையில், அதில் தன்னுடன் நடித்த சந்தன்குமார் என்பவரை காதலித்து நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கொரோனா தொற்றின் அச்சம் அதிகமாக இருப்பதால் இவரது திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இருப்பினும் இவரது ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram