குழந்தைகளுக்கு தைராய்டு குறைபாடுகளை மருந்துகள் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தல் மிக அவசியம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சினைகள் குறித்து டாக்டர் எழிலரசு கூறியதாவது:-
தைராய்டு சுரப்பி குறைவின் காரணமாக குழந்தை சுறுசுறுப்பு இல்லாமல் காணப்படும். வயதுக்கு ஏற்ற எடையில்லாமல் அதிக எடையுடன் இருத்தல். பெரிய நாக்கு, பால் குடிக்்காமல் இருத்தல், மலச்சிக்கல், உடல் நிலை குளிர்ந்து இருத்தல், கை, கால் தொள தொளவென இருத்தல், பச்சிளம் குழந்தை பருவத்தில் ஏற்படும் மஞ்சள் காமாலையானது நீண்ட நாட்களுக்கு குறையாமல் இருத்தல், தலையின் உச்சியில் உள்ள பள்ளமானது மூட வேண்டிய காலகெடு தாண்டியும் மூடாமல் இருத்தல்.
கழுத்தில் வீக்கம். உடலின் தோல் மென்மையை இழந்து, தடித்து காணப்படும்.குளிர் தாங்காத உடல்நிலை எந்நேரமும் தூங்கி வழிதல். பெண் குழந்தை எனில் வயதுக்கு வர தாமதமாதல்.தலைச்சுற்றல், தலைவலி, பார்வை குறைபாடுகள்.அயோடின் சத்து குறைவு இப்பருவத்தில் தைராய்டு சுரப்பி குறைய முக்கிய காரணமாக உள்ளது. முட்டைக்கோஸ், சோயா பீன்ஸ் போன்ற உணவுகள் சில நேரங்களில் காரணமாக உள்ளது. ஒரு சில மருந்துகள் குறைபாட்டை அதிகப்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு தைராய்டு குறைபாடுகளை மருந்துகள் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தல் மிக அவசியம். உடல் அறிகுறிகள் மற்றும் உடல் பாதிப்புகள் மருந்துகள் மூலம் முற்றிலும் மாறலாம். ஆனால் குழந்தையின் புத்திசாலித்தனம், குழந்தை பிறந்த 3 மாதங்களுக்கு பிறகு மருத்துவம் ஆரம்பிக்கும் நேரத்தில் கண்டிப்பாக குறைய வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோன்று நோயின் தன்மையை பொறுத்து மருந்துகள் எடுக்கும் காலமும் மாறுபடும். சில நேரங்களில் ஆயுள் முழுவதும் மருந்துகள் எடுக்கும் நிலை வரலாம்.
பருவ வயதில் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு அதிக தைராய்டு ஹார்மோன் தேவைப்படுவதால் தற்காலிக குறைபாடு ஏற்பட்டு நோய் அறிகுறிகளோடு கழுத்தில் வீக்கம் ஏற்படலாம். பச்சிளம் குழந்தை பருவத்தில் அதிக தைராய்டு சுரப்பி மிக அரிதாகவே உள்ளது. பள்ளிப்பருவத்தில் அதிக சுரப்புடைய குழந்தைகள் படிப்பில் மந்தநிலை, கவனமின்மை, உடல் சோர்வு, அதிகமாக கோபப்படுதல், அதிக உணர்ச்சி வசப்படுதல் போன்ற அறிகுறிகளோடு இருப்பார்கள். உடல் மிக மெலிந்து இருக்கும். ஆனால், பசி மிக அதிகமாக இருக்கும். கழுத்தில் தைராய்டு சுரப்பியானது வீங்கி காணப்படும். கை கால்களில் நடுக்கம், அதிக இதயதுடிப்பு, வியர்வை போன்றவையும் இருக்கலாம். இவற்றுக்கு உடனடி மருத்துவ ஆலோசனைதான் ஒரே தீர்வு.