சிலியை சேர்ந்த டிஜிட்டல் நாணய முதலீட்டாளர் ஒருவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு சில ஆலோசனை வழங்கிய நிலையில், இப்போது அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
சிலி நாட்டைச் சேர்ந்த டிஜிட்டல் நாணய முதலீட்டாளர் Davinci Jeremie என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு cryptocurrency-களின் மதிப்பு குறித்தும், தன்னுடைய புத்திசாலித்தனத்தையும், அதன் தொலை நோக்கு பயனை குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
இவர் தன்னுடைய இணைய பக்கத்தில், நீங்கள் எதிர்காலத்தில் ஒரு அதிர்ஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்றால், குறைந்த பட்சம் ஒரு டொலருக்கு பிட்காயின் வாங்குமாறு அறிவுறுத்தினார்.
இதன் மூலம் நீங்கள் லாபகரமான எதிர்காலத்தை அனுபவிக்க முடியும் என்று கூறினார். இவர் கூறியது போன்றே இப்போது cryptocurrency-யின் மதிப்பு 59,000 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
அதாவது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாதாரண முதலீட்டைக் கூட செய்தவர்கள் கூட இன்று லாபத்தை அனுபவித்து வருகின்றனர். இவர் அந்த ஆலோசனையை கூறிய நிலையில், தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், தனியார் விமானங்களில் பயணிப்பது, ஆடம்பர படகுகளில் பயணிப்பது என்று ஒரு சொகுசான வாழ்க்கையை Davinci Jeremie அனுபவித்து வருவதை பார்க்க முடிகிறது. இவர் தன்னுடைய பாலோவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு லொட்டரி மீதான சூதாட்டத்தை விட, cryptocurrency சூதாட்டம் உங்களுக்கு ஒரு வெற்றியை கொடுக்கும்,
நீங்கள் இதில் பிட்காயினில் முதலீடு செய்வதன் மூலல் 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம் என்று கூறினார்.
நான் சொல்வது சரியாக நடந்தால், நீங்கள் எனக்கு சொல்லலாம், Davinci Jeremie தன்னை பின்பற்றுபவர்களிடம் இப்போது இது மோசமான நிலைக்கு சென்றால் கூட, விரைவில் நல்ல நிலைக்கு திரும்பும் என்று நம்புகிறார்.