யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர் ஒருவருக்கும்,மருத்துவ ஆய்வுகூட பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதி இலக்கம் 02 இல் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிவர்களை சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.