முதியவரை மட்டும் ஆஸ்பத்திரி வளாகத்தில் வேனிலேயே காத்திருந்து சிகிச்சை பெறுமாறும், படுக்கை கிடைத்தவுடன் ஆஸ்பத்திரிக்கு உள்ளே அனுமதிப்பதாகவும் கூறியுள்ளனர்.
கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையளிக்க படுக்கை வசதி தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தவண்ணம் உள்ளனர். இதற்காக ஆஸ்பத்திரியின் அனைத்து வார்டுகளும் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு சிகிச்சை பிரிவு ஆகியனவும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கடந்த 22-ந்தேதி வயதான தம்பதியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வேனில் வந்தனர். ஆனால், அவர்களுக்கு படுக்கை வசதி கிடைக்கவில்லை. மேலும், ஆக்சிஜன் அளவும் மிகவும் குறைவாக காணப்பட்டது. அதனை தொடர்ந்து, முதியவரை மட்டும் ஆஸ்பத்திரி வளாகத்தில் வேனிலேயே காத்திருந்து சிகிச்சை பெறுமாறும், படுக்கை கிடைத்தவுடன் ஆஸ்பத்திரிக்கு உள்ளே அனுமதிப்பதாகவும் கூறியுள்ளனர். மூதாட்டியை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வேனில் காத்திருந்து சிகிச்சை பெற்றுவந்த முதியவரை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து, அந்த தம்பதியதியரின் பேத்தி மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகருக்கு இ.மெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அதில், தான், ரஷ்யாவில் தங்கி எம்.பி.பி.எஸ். படித்து வருவதாகவும், தனது தாத்தா, பாட்டி இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வார்டுக்கு வந்த போது, படுக்கை வசதி இல்லாமல் வேனிலேயே சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், தனது பாட்டியை சிகிச்சைக்கு அனுமதியளிக்கவில்லை, சுமார் 50 மணி நேரம் வேனில் காத்திருந்த நிலையில் திடீரென்று வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.வுடன் ஆஸ்பத்திரிக்கு உள்ளே அனுமதிப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஆஸ்பத்திரி மற்றும் டாக்டர்களின் நிலைமையில் அவர்களை குறைசொல்ல முடியாவிட்டாலும், வயதான நிலையில், ஆக்சிஜன் அளவு குறைந்து விட்டதால், அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்க உதவி செய்யுமாறும் கேட்டுள்ளார். இது குறித்து கலெக்டர் ஆஸ்பத்திரி டீனுக்கு நேற்று தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த தம்பதி இருந்த வேன் கண்டறியப்பட்டு, 1 மணி நேரத்தில் 2-வது மாடியில் படுக்கை வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டது.
இதற்காக அந்த மாணவி கலெக்டர், டீன், டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.