இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடந்த திங்களன்று தமது நாட்டவர்களுக்காக இலங்கைக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை வெளியிட்டது. அதில் இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோவிட் காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம். அத்துடன் தீவிரவாதம் காரணமாக இலங்கையில் அதிக எச்சரிக்கை உள்ளது என்று அந்த புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ள இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், நாட்டில் நிலவும் கோவிட் நிலைமை தொடர்பிலேயே இலங்கைக்கான பயண ஆலோசனை நிலை 3 இல் இருந்து நிலை 4 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.
இதனை தவிர ஏற்கனவே உள்ள தீவிரவாத அச்சுறுத்தல் மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
கோவிட் காரணமாக இலங்கைக்கான 4ம் நிலை பயண சுகாதார அறிவிப்பை அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டிருந்தது, இது இலங்கையில் மிக உயர்ந்த கோவிட் தொற்றை குறித்துநிற்கிறது.