இலங்கையின் கோட்டை இராஜதானியை ஆட்சி செய்த ஆறாம் பராக்கிரமபாகு மன்னனின் 19 பரம்பரையை சேர்ந்த இளவரசி சீனாவில் வசித்து வருவதாக சீனா நடத்தி வரும் BRISL டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச பரம்பரையை சேர்ந்தவர் என கருதப்படும் இந்த இளவரசி சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் கடந்த 26 ஆம் திகதி நடந்த வெசாக் பௌர்ணமி தின நிகழ்வில் கலந்துக்கொண்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கோஹேனவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் அந்த டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.