பிரான்ஸ் மர்ம நபர் ஒருவன் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dordogne மாகாணத்தில் உள்ள Lardin-Saint-Lazarre பகுதியிலே இச்சம்பசவம் நடந்துள்ளது.
தப்பியோடிய ஆயுதமேந்திய நபர் முன்னாள் இராணுவ வீரர் என தகவல் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பிரான்ஸ் ஊரகங்கள் வெளியிட்ட முதற்கட்ட தகவலின் படி, முன்னாள் இராணுவ வீரர் முன்னாள் மனைவி வீட்டிற்கு சென்று, அவரின் புதிய ஆண் நண்பரை தாக்கியுள்ளார்.
பின் 30 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் கிராம தெருவில் சுற்றியுள்ளார், பின் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பிச்சென்றதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ வீரர் இரண்டு பொலிஸ் வாகனத்தையும் சுட்டு சேதப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தப்பியோடிய ஆயுதமேந்திய நபரை தேடும் பணியில் 150 பொலிசார் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தப்பியோடிய ஆயுதமேந்திய நபரை தேடும் நடவடிக்கை நடைபெற்று வருவதால், மறுஅறிவிப்பு வரும் வரை உள்ள மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என Dordogne மாகாணம் அறிவித்துள்ளது.