நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 40,000க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 20 முதல் ஜூன் 2 வரை மொத்தம் 41,189 கோவிட் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் (HPB) அளித்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு வாரங்களில் மூன்று நாட்களில் 3,000க்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, மே 20ம் திகதி 3,441 பேரும், 21ம் திகதி 3583 பேரும், ஜூன் 2ம் திகதி 3306 பேரும் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் பெரும்பான்மையான கோவிட் -19 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் 51,182 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 35,563 பேரும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 17,952 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், மூன்றாவது அலை தொடங்கியதன் மூலம் நாட்டில் நாளாந்தம் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கண்டறியப்படுவது ஆழ்ந்த கவலைகள் ஏற்படுத்தியிருப்பதாவ சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.