ஜேர்மனியின் நடவடிக்கை எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் தருகின்றது என ஜேர்மனியில் இருக்கும் ஈழத்தமிழ் மக்களவை மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்த்து கோரிய தமிழீழத் தமிழர்களை நாடு கடத்தல் தொடர்பானது எனும் தலைப்பின் கீழ் குறித்த அமைப்புக்கள் இன்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலாங்கு மீனைப் போல பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டி இரட்டை வேடமிட்டுக் கொள்கிறதா ஜேர்மனி என்று எமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது இச்செயற்பாடுகள்.
ஜேர்மனிய அமைச்சுக்களில் ஒன்றாக இருக்கும் சர்வதேச வெளிவிவகாரங்களுக்கான அமைச்சு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையகத்தால் கொண்டுவரப்பட்டிருந்த, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் மனிதவுரிமைகள் மீறப்பட்டது என்ற தீர்மானத்துக்கு ஆதரவளித்தது ஜேர்மனிய அரசின் வெளிவிவகார அமைச்சு.
அதனூடாக இலங்கையில் மனிதவுரிமைகள் அன்று ஆட்சியில் இருந்த மகிந்தராஜபக்ச அரசால் மீறப்பட்டது என்று கூறியது. அத் தீர்மானத்தில் இருந்த சரத்துக்களை முழுமையாக ஏற்று அத் தீர்மானத்துக்குத் தனது ஆதரவை வழங்கியது.
அதேநேரம், தமிழீழ விடுதலைப் போர் மௌனிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் நடத்திய இனவழிப்பு முடிவுறாது தொடரும் இன்றைய சூழலில், இன்றும் ஆட்சியில் இருந்து கொண்டு இலங்கையில் இராணுவ ஆட்சி அதிகாரத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு இனவழிப்பின் தொடர்ச்சியையும் மனிதவுரிமைகளையும் மீறிக்கொண்டு இருக்கும் மகிந்த மற்றும் கோட்டபாய சகோதரர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றார்கள்.
அவர்களால் இன்றும் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவரும் இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து உயிர் தப்பி வாழ்வதற்காக தாய்நாடு விட்டு தப்பி வந்து அகதி அந்தஸ்து கோரிக்கை விடுத்திருந்த ஈழத்தமிழ் மக்கள் பலரின் கோரிக்கையை நிராகரித்தது மட்டுமல்லாது நாடுகடத்தும் செயற்பாட்டை முன்னெடுத்துவருகிறது ஜேர்மனிய அரசின் உள்துறை அமைச்சு என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,