பெண்ணின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கண்டியில் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கண்டி – லூவீஸ் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது வாகனத்திலிருந்த சிறுமி ஒருவர் உட்பட 29 வயது ஆண் மற்றும் 37 வயது பெண் ஆகியோரை பொலிஸார் பரிசோதனை செய்தனர்.
இவர்களில் 37 வயது பெண்ணின் மார்பு பகுதியில் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.