இலங்கையில் பச்சிளம் குழந்தை கோவிட் 19 தொற்றால் காரணமாக உயிரிழந்துள்ளது.
பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கோவிட் நிமோனியா இந்த மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்த குழந்தையின் மரணம் கம்பளை மருத்துவமனையில் நடந்துள்ளது.
இதற்கு முன்னர் கொழும்பு ரிஜ்வே மருத்துவமனையில் கடந்த வருடம் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை கோவிட் காரணமாக உயிரிழந்தது.
இதுவே கோவிட் காரணமாக உயிரிழந்த முதல் குழந்தையாக இருந்ததுடன் தற்போது 8 நாட்களான குழந்தை உயிரிழந்துள்ளது.
இலங்கையில் இதுவரை கோவிட் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டி வருகிறது.
கோவிட் காரணமாக ஆயிரத்து 910 பேர் இறந்துள்ளனர். அத்துடன் ஒரே நாளில் அதிகமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று அறிவிக்கப்பட்டதுடன் நேற்றை தினம் 67 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்தனர்.