கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உலகம் முழுவதும் 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 3 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இதில் இதுவரை ஆயிரத்து 467 டாக்டர்கள் பலியாகி இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் நேற்று தெரிவித்துள்ளது. கொரோனா முதல் அலையில் 748 டாக்டர்கள் இறந்ததாக குறிப்பிட்டுள்ள மருத்துவ சங்கம், 2-வது அலையில் இதுவரை 719 டாக்டர்கள் இறந்திருப்பதாக கூறியுள்ளது. 2-வது அலையில் அதிகபட்சமாக பீகாரில் 111 பேரும், டெல்லியில் 109, உத்தரபிரதேசத்தில் 79, ராஜஸ்தானில் 43, ஜார்கண்டில் 39, ஆந்திராவில் 35 பேரும் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் 32 டாக்டர்கள் பலியாகி இருக்கிறார்கள். கேரளாவில் 24 பேரும், கர்நாடகாவில் 9 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர்.