ஜெர்மனி – சுவெற்றா அம்பாள் ஆலயத்தில் பல வருட காலமாக தொடர்ந்து இடம்பெற்று வரும் நிர்வாக முறைகேடுகளுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கோஷங்களை எழுப்பியவாறு அமைதி பேரணியொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பேரணி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு இரகசியமான முறையில் நிர்வாகத்தினரின் உறவுக்காரர்கள், நண்பர்கள் அடங்கலாக 31 பேருடன் கூட்ட மண்டபம் வரை தொடரணியாக போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்ட பேரணியில் ஜெர்மனிய ஊடகத்தினர் மற்றும் தமிழ் ஊடகத்தினரும் பங்கெடுத்துள்ளதுடன்,அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை காவலுக்கு நிறுத்தி,கதவை பூட்டி கூட்டம் நடைபெற்றது.