ஜேர்மனில் வசிக்கும் 53 வயதான மன்னாரை சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது அவரது மனைவி மூர்க்கத்தனமாக தலையில் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் குறித்த நபர் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.
இலங்கையில் உள்ள பல்கலைகழக மாணவி ஒருவருடன் தகாத முறையில்,உரையாடியதை அடுத்தே மனைவி அவர்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மன்னாரில் வசிக்கும் குறித்த மாணவிக்கு தந்தை இல்லை எனவும் தாயாரும் 2 சகோதரிகளுடனும் வறுமை நிலையில் வாழ்ந்து வந்ததாகவும் தெரியவருகின்றது.
இதன் காரணமாக வெளிநாட்டில் வாழும் உதவி வழங்கும் சில நபர்கள் இவ்வாறான மாணவிகளின் விபரங்களை எடுத்து உதவி புரிந்து வந்துள்ளார்கள்.
இந் நிலையிலேயே ஜேர்மனியில் வசிக்கும் குறித்த நபர் அம் மாணவிக்கு உதவி வந்த நிலையில் அவர்களின் தொடர்பு வேறுவிதமாக சென்ற நிலையில் மாணவியின் குடும்பத்தினர் புதிய வீடுகட்டி குடியமர்ந்துள்ளார்கள்.
இதன் காரணமாக அங்கிளின் வங்கிக் கணக்கிலிருந்து பல லட்சம் ரூபா பணம் மாயமாகியது. இவற்றை எல்லாம் ஆராய்ந்து அறிந்த அவரின் மனைவி கணவரை பின்னி எடுத்துள்ளார்.
இதேவேளை புலம்பெயர் நாட்டில் வாழும் பலர் தாயகத்தில் வாழும் நமது உறவுகளிற்கு பலவழிகளிலும் உதவிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த நபரின் வெட்ககேடான இந்த செயல் அவர்களுக்கும் களங்கத்தை ஏற்டுத்தியுள்ளதாக பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.