இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் 3 பெண்கள் பொலிஸ் அதிகாரி உடையணிந்து, வயதான முதியவரை மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம், யமுனா நகரில் புது ஹமிதா காலனியில் தனியாக வசித்து வருகின்றார் முதியவர் ஒருவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கும் நிலையில், மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். மகள் திருமணமாகி மாமியார் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் தனியாக வசித்து வந்த தாத்தாவின் வீட்டிற்கு, 3 பெண் பொலிசார் திடீரென நுழைந்ததோடு, அவரது ஆடைகளை கழட்டுமாறு மிரட்டியுள்ளனர்.
பொலிஸ் அதிகாரியாக வந்த பெண்களுக்கு பயந்து முதியவரும், ஆடைகளை கழட்டி நிர்வாணமாக நின்ற நிலையில், அவரை காணொளி எடுத்துவிட்டு, 5 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டியதோடு, அவ்வாறு இல்லை என்றால் இந்த காணொளியினை வெளியிட்டுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன தாத்தா தன்னிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாயை குறித்த பெண்களிடம் கொடுத்துள்ளார். குறித்த பெண்கள் அதனை முதல்தவணையாக வாங்கி செல்வதாக கூறியதோடு, அடுத்து விரைவில் வருவோம் என்று மிரட்டல் விடுத்து எஸ்கேப் ஆகியுள்ளனர்.
தாத்தா கொடுத்த புகாரின் பெயரில், வழக்கு பதிவு செய்த பொலிசார் 3 பெண்களையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.