தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களுக்கு மட்டும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும், அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, இப்படம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா, பார்ப்போம்..
கதைக்களம்
லண்டனில் சிவதாஸ், பீட்டர் என்று இரண்டு மாஃபியா கும்பலுக்கும் மோதல், வழக்கம் போல் ஒருவர் மாற்றி ஒருவர் கேங்கில் உள்ள ஆட்களை கொள்கின்றனர்.
இதே நேரத்தில் தனுஷ் ஊரில் ஒரு பரோட்டா கடையில் வேலைப்பார்த்து வருகிறார். அப்போது தன் ஊரில் ஒரு வட இந்தியாவை சேர்ந்த கடைக்காரர் தம்பியை தனுஷ் இரயிலை மறித்து கொள்கிறார்.
லண்டனில் உள்ள சிவதாஸை போட்டு தள்ள, தனுஷை லண்டன் அழைத்து செல்கின்றனர். அங்கு சென்று சிவதாஸ் குறித்து தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துக்கொண்டு அவரை கொல்ல தயாராக போது ஒரு டுவிஸ்ட் வருகிறது, அதன்பின் என்ன ஆனது என்பது மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
தனுஷ் தமிழ் சினிமாவில் நீங்கள் என்ன கதாபாத்திரம் வேண்டுமானாலும் கொடுங்கள் நான் இருக்கிறேன் என்பது போல் பின்னி பெடல் எடுக்கிறார். அதும் அவரின் அலட்டல் இல்லாத பாடி லாங்குவேஜ், பீட்டரை முதல் தடவை பார்க்கும் போது நக்கல் செய்வது, கடைசியாக அவர் முன்பே உட்கார்ந்து பேசுவது என அணைத்தும் அசத்தல்.
படத்தின் மிகமுக்கியமான கதாபாத்திரமான சிவதாஸ் கேரக்ட்டர் என்னமோ மனதில் பெருசாக ஒட்டவே இல்லை, மலையாளத்தில் பெரிய நடிகர் என்றாலும் தமிழுக்கு முகம் தெரியாத ஆள் என்பதால் கூட இருக்கலாம்.
மேலும், படத்தின் முதல் பாதி மிக விறுவிறுப்பாக செல்ல, இரண்டாம் பாதி திரைக்கதை கொஞ்சம் தடுமாற்றம் தான், அதிலும் பார்த்து பழகி போன ஜெய்சங்கர் கதையை இந்த காலத்திற்கு எடுத்தது போல் உள்ளது.
படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் சந்தோஷ் நாரயணன் இசை தான், மிரட்டி எடுத்துள்ளார். அதிலும் கிளைமேக்ஸில் தனுஷ் வில்லனை பார்க்க துப்பாக்கியுடன் வரும் போது வரும் இசை.பல பேர் ரிங்டோன் தான் அது. ஒளிப்பதிவும் லண்டன் இருள் உலகத்தை மிக கச்சிதமாக காட்டியுள்ளனர் .
க்ளாப்ஸ்
தனுஷ் நடிப்பு மற்றும் வசனங்கள்
படத்தின் முதல் பாதி
பல்ப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்புக்கு பஞ்சம்
மொத்தத்தில் ஜகமே தந்திரம் எதிர்ப்பார்க்காத ஏமற்றம்