அவுஸ்திரேலியாவில் சிட்னியைச் சுற்றியுள்ள 4 வட்டாரங்களில் நாளையிலிருந்து ஒரு வார முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சிட்னியில், புதிய டெல்ட்டா வகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று புதிதாக 22 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வாரம் பல டஜன் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன்முலம் டெல்டா வகை வைரஸின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஒரு வார காலத்திற்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பணிகள், கல்வி, மளிகைப் பொருள் வாங்க, வெளிப்புற உடற்பயிற்சி ஆகியவற்றுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.
கோவிட்-19ஐ எதிர்கொண்ட உலகின் மிக வெற்றிகரமான நாடுகளில் அவுஸ்திரேலியாவும் உள்ளது, அங்கு 30,000 பேர் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 910 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.