தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்கராக 80களில் ஆரம்பித்து தற்போது அரசியல் வரை பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பத்தில் ஆர்மி போலிஸ் ஆபிசர் என்றாலே நியாபகம் வருபவர் விஜயகாந்த் தான்.
அப்படி தமிழ் சினிமாவிற்கு நிறைய நல்ல விஷயங்களையும் கொடுத்தவர். சமீப காலமாக உடல் நிலையில் ஏற்பட்ட சில பிரச்சனையால் நடிப்பைவிட்டும் தற்போது அரசியலில் முழு ஈடுபாடு இல்லாமலும் இருந்து வருகிறார்.
நடிகர்கள் பற்றி பல கிசுகிசுக்கள் வர செய்வதை போன்ற விஜயகாந்தும் அதில் சிக்கினாராம். அப்ப்டியாக, விஜயகாந்த் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மூன்று நடிகைகளை காதலித்துள்ளார் என்று பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் கூறியுள்ளார்.
ஆரம்ப காலகட்டங்களில் அறிமுகப் படங்களில் நடித்தவர் நடிகை பத்மா பிரியா. இவருக்கு சென்னையில் கொட்டிவாக்கம் பகுதியில் ஒரு சொந்தமாக ஒரு வீடு வாங்கி கொடுத்துள்ளாராம். சில காரணங்களால் அது மறைய, தூரத்து இடி முழக்கம் படத்தில் நடித்தவர் பூர்ணிமா.
விஜயகாந்தை காதலித்த பூர்ணிமாவுக்கும் அதே பகுதியில் ஒரு பெரிய பங்களா வாங்கி கொடுத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் சொந்தமாக பெட்ரோல் பங்க் ஒன்றையும் வைத்து கொடுத்து பத்திரமாக பாதுகாத்து வந்தாராம். இதையெல்லம் தவிடுபொடியாக்கியது நடிகை ராதிகா விஷயம்.
விஜயகாந்தை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ராதிகா செய்த விஷயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இருந்தாலும் ராதிகாவுக்கு விஜயகாந்த் எட்டாக்கனியாகவே இருந்து விட்டார். கடைசியாகத்தான் பெற்றோர்கள் பார்த்த பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டிலானார்.




















