தமிழ் சினிமாவில் திரைக்கு இருக்கும் கலைஞர்களாக கருதப்படுபவர்களில் ஒருவர் நடன இயக்குநர்கள். அந்தவரிசையில் பல கஷ்டங்களை தாண்டி இந்திய அளவில் நடன இயக்குநராக பிரபலாகி இருப்பவர் கலா மாஸ்டர்.
நடன இயக்குநரான ரகு என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டார் கலா. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தான் பட்ட கஷ்டங்களை கூறியுள்ளார். அதில் பெண்களை ஒருசிலர் மதிக்க மாட்டார்கள். திறமையை வெளிப்படுத்தினால் தான் மதிப்பு உயரும்.
அப்படி பெண்கள் போலவே வளரவில்லை நான். ஆண்கள் போலவே எங்கள் தாயார் எங்களை வளர்த்தார் என்று கூறியுள்ளார். மேலும் ஆண்களை போல தான் நான் படப்பிடிப்பிலும் நடந்து கொள்வோம் என்று கூறியும் உள்ளார்.




















