பிரபல தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கும் விஜேவாக பணியாற்றி பிரபலமானவர் நடிகை மந்திரா பேடி. சிம்பு நடித்த மன்மதன் படத்தில் சிறு கதபாத்திரமான டாக்டர் ரோலில் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து சில பால்வுட் படங்களில் நடித்து வந்தார். 1999ல் இயக்குநர் ராஜ் கெளடில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். சமீபத்தில் மந்திரா உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் புகைப்படங்களை ஜிம் ஒர்க்கவுட் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், ஜுன் 30 அதிகாலையில் மந்திரா பேடியின் கணவரும் இயக்குநருமான ராஜ் கெளடில் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். சில நாட்களுக்கு முன் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொண்டு புகைப்படத்தையும் வெளியிட்டனர்.
இதனால் பாலிவுட் பிரபலகள் இயக்குநர் மரணத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்து இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram




















