தமிழகம் மற்றும் கேரளா வழியாக இந்தியாவுக்குள் ஆளில்லா விமானங்களை ஏவி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக“ உளவுத்துறை தகவல்கள் எச்சரித்துள்ளன.
ஏற்கனவே தமிழகத்தின் ராமேஸ்வரம் கடற்பரப்பு அருகே இலங்கை பகுதியில் சீனா ஊடுருவி நிற்கிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகமும் சீனா வசமாகி உள்ளது.
இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிரியா, ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கேரளாவுக்கு திரும்பி உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, அண்மையில் ஜம்மு விமானப் படைத் தளம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 ஆளில்லா விமானங்களான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இதில் 2 விமானப் படை வீரர்கள் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆளில்லா விமானங்கள் ஜம்மு வான்பரப்பில் பறக்கவிடப்பட்டன.
இந்த நிலையில் ஆளில்லா விமானங்கள் ஊருவும் அபாயம் இருப்பதாக தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.