கம்போடியாவில் இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்ட 11 பேர் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல், கடலோர கம்போட் மாகாணத்தில் நடந்த இறுதி சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 11 பேர் அடுத்தடுத்து இறந்தனர், மேலும் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிராமப்புற கம்போடியாவில் திருமண விருந்துகள், கிராம விழாக்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் வீட்டில் தாயரிக்கப்படும் அரிசி ஒயின் பரிமாறப்படுவது வழக்கமானது.
குறித்த இறுதிச் சடங்கில் வீட்டில் தயாரிக்கப்பட்ட மது பரிமாறப்பட்டதாகவும், அதை குடித்ததால் 10 பேர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த மது நச்சு தன்மையுடைய மெத்தனால் கொண்ட காய்ச்சப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களில், கம்போடியா முழுவதும் மூன்று தனித்தனி சம்பவங்களில் மெத்தனால் கொண்ட காய்ச்சப்பட்ட மது குடித்து 30க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.