தமிழ்ல் சினிமாவில் காதலர்களுக்கென்றே இயக்கப்பட்டு பெரியளவில் ஹிட் கொடுத்த படம் காதலர் தினம். குணால் சிங் நடித்துள்ள இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார் நடிகை சோனாலி பிந்த்ரே.
பம்பாய் படத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு நடனமாடிய பின் கண்ணோடு காண்பெதெல்லாம் படத்தில் நடித்தார். பாலிவுட் நடிகையாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சோனாலி, சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார்.
இதையடுத்து பூரண குணமடைந்து மும்பை வந்தடைந்தார். திருமணமாகி ஒரு மகன் இருக்கும் சோனாலி தற்போது சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
பாலிவுட்டின் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வரும் சோனாலி மீண்டும் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும் வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
View this post on Instagram