தமிழகத்தில் சண்டை போட்ட மனைவி, குடும்பம் நடத்த வரமாட்டேன் என்று தாய் வீட்டிலேயே இருந்ததால் அவரின் தங்கையை தன் வீட்டுக்கு கணவர் அழைத்துச் வந்த நிலையில் சிறிது நேரத்தில் அப்பெண் தூக்கில் சடலமாக தொங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரம் பகுதியில் பொன்னியம்மன்மேடு வீரபாண்டியர் தெருவில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இப்பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரனின் மகள் சரண்யா. இவருடைய சகோதரி மஞ்சு. சரண்யா தன் கணவர் கார்த்திக்குடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து பெற்றோர் வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார்.
மனைவியை சமாதானம் பேசி அழைத்துச் செல்ல வந்த கார்த்திக் அது முடியாது போகவே, வீட்டிற்கு திருப்பி இருக்கிறார்.
அப்போது கார்த்திக் தனது மச்சினியான 20 வயதான மஞ்சுவை பைக்கில் தனது வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே, மஞ்சு தூக்கில் தொங்கி விட்டதாக தகவல் வந்திருக்கிறது. இதை கேட்ட சரண்யா மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரையடுத்து மஞ்சு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.