விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சீரியலில் முத்துராசு என்ற வேடத்தில் நடித்துவந்தவர் மர்மமான முறையில் சுட்டுக் கொள்ளப்பட்டார், அவரை கொன்றது யார் என பல நாட்களாக ரசிகர்கள் மனதில் கேள்வி ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுநாள் வரை இவராக இருக்கலாம், அவராக இருக்கலாம் என சீரியலிலேயே கூறிக்கொண்டு வருகின்றனர்.
இன்று ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் முத்துராசுவை கொன்றது யார் என்ற ரகசியம் வெளியே வருகிறது. அதாவது முத்துராசுவை கொன்றது ஐஸ்வர்யாவின் அம்மா நாச்சியார் தானாம்.
அவரே இந்த உண்மையை மாயனிடம் கூறும் காட்சிகள் இன்றைய சீரியலில் இடம்பெறுகிறது.