தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.
மேலும், இதுவரை இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி ஊர் சுற்றும் புகைப்படங்களையும், சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது உண்டு.
அதற்கு ரசிகர்களும் எப்போது திருமணம் என கேட்பதும் வாடிக்கையாகவே உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா விக்கியுடன் தனது வீட்டிற்கு சென்று அவரது தந்தையை பார்த்துள்ளார்.
மேலும், தந்தை உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது பேசிய அவரது தந்தை இப்போதைக்கு அவரின் ஆசை நயனை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்பது தானாம்.
அதை கேட்டு நயன்தாரா நிச்சயம் கூடிய விரைவில் திருமணம் செய்துக்கொள்வேன் என தந்தை உறுதியளித்துவிட்டு வந்தாராம். ஆக விரைவில் நயன் விக்கியின் திருமணம் நடந்தே ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.