கோவிட் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இந்த பயண அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
COVID – 19 காரணமாக இலங்கைக்கு ‘நிலை 3 பயண சுகாதார அறிவிப்பை’ இந்த மையம் வெளியிட்டுள்ளது. இது இலங்கையில் COVID-19 இன் உயர் பரவல் மட்டத்தைக் குறிப்பதாக தெரியவருகிறது.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசியை செலுத்திக் கொண்டால், COVID – 19ஆல் கடுமையான ஆபத்து குறையலாம்.
இந்தநிலையில் எந்தவொரு சர்வதேச பயணத்தையும் திட்டமிடுவதற்கு முன், தடுப்பூசி போடப்படாத பயணிகளுக்கான பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்யுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையின் சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு வசதிகள், ஹோட்டல்கள், கிளப்புகள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள் என்பவற்றை குறிவைத்து இலங்கையில் பயங்கரவாதிகள் சிறிதளவு அல்லது எச்சரிக்கை இன்றி தாக்கக்கூடும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.