நடிகர் சிம்பு கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன.தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதன்படி நடிகர் சிம்புவும் ஒரு காலத்தில் டுவிட்டரில் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்தார். பின்னர் திடீரென அதிலிருந்து விலகியிருந்த சிம்பு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் மீண்டும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.
டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு, அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த வாரம் சமையல் செய்யும் வீடியோ ஒன்றை சிம்பு பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ மிகவும் வைரலானது.
இந்நிலையில், நடிகர் சிம்பு சமையல் செய்யும் வீடியோ, இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வீடியோவை ஒரே வாரத்தில் ஒரு கோடி பேர் பார்த்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் இத்தகைய சாதனையை படைக்கும் முதல் தமிழ் நடிகர் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது