இப்போது இந்த போட்டி முழுமையாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு, தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 5-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் வருகிற 19-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சுடன் மோதுகிறது. நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் லீக்கில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 20-ந்தேதி எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து 24-ந்தேதி நெல்லை ராயல் கிங்சையும், 28-ந்தேதி சேலம் ஸ்பார்டன்சையும், ஆகஸ்டு 1-ந்தேதி திண்டுக்கல் டிராகன்சையும், 4-ந்தேதி மதுரை பாந்தர்சையும், 6-ந்தேதி கோவை கிங்சையும், 8-ந்தேதி திருச்சி வாரியர்சையும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சந்திக்கிறது.
‘2021-ம் ஆண்டு டி.என்.பி.எல். தொடரை பார்வையாளர்கள் இன்றி கடுமையான கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவதற்கு தமிழக அரசு முறையாக அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலை முடித்த பிறகு 9-ந்தேதி முதல் அணியினர் சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்க உள்ளனர்’ என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்தார்.