இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான எஞ்சலோ மெத்தியூஸ் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாமில் தன்னை பெயரிடுவது தொடர்பில் பரிசீலிக்க வேண்டாம் என அவர் அக்கடிதத்தின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளார்.
தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவது தொடர்பான தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் எதிர்வரும் இரு வாரங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இதனை அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இன்றைய தினம் கைச்சாதிடப்பட்ட, கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் எஞ்சலோ மெத்தியூஸ் கையெழுத்திட்டிருக்கவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன